வேதாரணியம் ஜனவரி 11
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நாப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை,கோடியக்காட்டிற்கு நாகை மாவட்டத்திலிருந்து 52 மாணவர்களும், வழிகாட்டி ஆசிரியர்களும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரும் என 65 பேர் அறிவியல் மற்றும் கல்வி சுற்றுலாவாக மாவட்ட அறிவியல் தலைவர் ஆரீஃப் தலைமையில் வந்தனர்.
துளிர் வினாடிவினாவில் பள்ளி அளவில் தேர்வாகி,வட்டார அளவில் வாகைசூடி மாவட்ட அளவில் கலந்து கொண்ட, நாகப்பட்டினம்,கீழ்வேளூர்,கீழையூர்,தலைஞாயிறு,திருமருகள் மற்றும் வேதாரணியம் என 6 வட்டாரங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
அரசுப்பேருந்து மூலம் வருகை புரிந்தவர்களை வேதாரணியம் வட்டார தமிழ்நாடு அறிவியல் இயக்கதின் சார்பில் வரவேற்கப்பட்டது. பின்னர் வனத்துறையின் இரண்டு சிற்றுந்துகள் மூலம் மூன்று கலங்கரைவிளக்கங்கள்,துறைமுகம், அருங்காட்சியகம், பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள் என பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.நவீன தொலைநோக்கிககள்கொண்டு காடு,கடல்,சுற்று வட்டாரங்களை கண்டுகளித்தனர்.மாலையில்,ஸ்ரீராமர் பாதம் அருகில் நடைபெற்ற மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடலில்,அறிவியலின் அவசியம்,துளிர்,வானவில் சார்ந்த தகவல்களை பால இரணியன் பகிர்ந்தார்.அனைவருக்கும் அறிவியல் நாட்காட்டி வழங்கப்பட்டது.

நிகழ்வு சிறப்பாக அமைய வன அலுவலர் அயூப்கான் தலைமையிலா வனத்துறையினர் பேருதவி புரிந்தனர்.
6 வட்டார இயக்க நிர்வாகிகளுடன்,மாவட்டச்செயலாளர் பால இரணியன்,மாவட்டப்பொருளாளர் நல்லாசிரியர் சௌ.கண்ணன்,துளிர் வினாடிவினா ஒருங்கிணைப்பாளர் காட்சன்,வழிகாட்டி ஆசிரியர்கள், இவர்களுடன் வேதை வட்டார இயக்கம் பிச்சைக்கட்டளை R.சுப்பிரமணியன்,தேனீ R.அரசமணி,கோடியக்காடு R.நீலமேகம் மற்றும் வட்டாரத்தலைவர் வே.சித்திரவேலு ஆகியோர் பங்கேற்றனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

