நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புரா தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜனவரி 9
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 192 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்
அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நாகப்பட்டினம் வட்டம், சம்பாதோட்டம் கிராமத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆணையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம், திருக்குவளை, வேதாரண்யம் மற்றும் கீழ்வேளுர் ஆகிய வட்டத்தை சேர்ந்த 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,32,750 மதிப்பீட்டில் தையல் இயந்திரம், காதொலி கருவி, மூன்று சக்கர சைக்கிள் போன்றவைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

