• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம்  2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
January 6, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவர்  அட்வகேட் சுபாசினி வில்சன்  பதவியேற்பு விழா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம்

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெறுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.

 

நாகப்பட்டினம் ஜனவரி 6

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்துதல் மற்றும் இணையதளம் மூலம் பதிவு செய்வது குறித்து, அரசு அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உடற்கல்வி இயக்குநர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் உடனான மாவட்ட அளவிலான ஆலோசனைக்; குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்;ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 1. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல் மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 27.1.2023 (ம) 28.1.2023 ஆகிய தேதிகளிலும், கால்பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் எதிர்வரும் 28.1.2023 அன்றும், வளைகோல்பந்து மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகள் 29.12023 அன்றும் நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 2. கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல் மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 7.2.2023 (ம) 8.2.2023 ஆகிய தேதிகளிலும், கால்பந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் எதிர்வரும் 8.2.2023 அன்றும், வளைகோல்பந்து மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகள் 9.02.2023 அன்றும் நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 3. பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு (15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 15.2.2023 அன்று நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 4. மாற்றுத் திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு 50மீ ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு 100மீ ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100மீ ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100மீ ஓட்டம், கபடி போட்டிகள் 31.1.2023 அன்று நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 5. அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிக எதிர்வரும் 10.02.2023 அன்று நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், மற்றும் பொது மக்கள் அதிக அளவில் பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமெனவும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும் பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களையும் எதிர்வரும் 17.1.2023-க்குள் அதிக அளவில் பதிவு செய்து பயன்பெற வேண்டுமெனவும், போட்டிகளில் அதிகப்படியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வதற்கு, மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வி, மாற்றுத்திறனாளிகள் துறை, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி பகுதிகளில் அந்தந்த அலுவலர்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர், நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.மு.குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவர் அட்வகேட் சுபாசினி வில்சன் பதவியேற்பு விழா!!

Next Post

மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா நடராஜர் கோலத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நடன தீபாரணை ஏராளமான பக்தர்கள் வழிபாடு

Next Post
தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2 வது ஆண்டுக்கான புதிய தலைவர்  அட்வகேட் சுபாசினி வில்சன்  பதவியேற்பு விழா!!

மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழா நடராஜர் கோலத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நடன தீபாரணை ஏராளமான பக்தர்கள் வழிபாடு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In