மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவாலயங்களில் தமிழக முழுவதும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சுவாமி நடராஜர் கோளத்தில் அம்பாளுடன் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நடராஜர் கோலத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கும் நடராஜருக்கும் தீபாராதனை நடைபெற்றது.

இந்த ஆருத்ரா தரிசன விழாவில் தமிழ்நாடு வ உ சி பேரவை தலைவர் சைவத் திரு கீதா செல்வ மாரியப்பன், ராஜசேகர், நெல்லையப்பர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்டளைதாரர் தெய்வத்திரு கந்தசாமி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

