தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்;சியில் சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் மாப்பிள்ளையூரணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்;டத்தில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்த உருக்குலைந்த விபத்துக்களை உருவாக்கும் வகையில் இருந்த 110 மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைத்து தரவேண்டும் என்று மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலையில் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதன்படி மாப்பிள்ளையூரணி பகுதியில் பழைய மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் காமராஜ், பிலோமின்ராஜ், கணேசன், ஜெயசீலன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, ஜேசுராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும், ராமச்சந்திரன், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

