நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஜனவரி 05
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.28 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், ஆழியூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், அக்கரைப்பேட்டை ஊராட்சியில் 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டும் பணிகள், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.33.70 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கும் பணிகள், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.98.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.01 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் புனரமைப்பு பணிகள், காந்தி மகான் தெரு சாலையை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.19.46 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.4.92 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, பாலமுருகன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பசுபதி, ஊராட்சி மன்ற தலைவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

