நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் ஜனவரி 05
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பான ஏற்கனவே வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ளவர்கள் நேரடியாக விவசாயிகளின் வயல்களுக்கே சென்று தரமான கரும்புகளை பார்வையிட்டு இந்தாண்டு 2,17,000 கரும்புகளை கொள்முதல் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்தனர். கரும்புகள் சராசரி 6 அடிக்கு குறையாமல் சராசரி தடிமனை விட கூடுதல் தடிமன் கொண்ட, நோய் தாக்காத கரும்புகளை வாங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வட்டார அளவிலான குழுவினர் சரியான அளவில் உள்ள கரும்புகளை தேர்வு செய்துள்ளனரா என இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரமான கரும்புகளை தரம்பிரித்து பொதுமக்களுக்கு அனுப்ப வேண்டும் என விவசாயிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். அந்த ஆய்வின்போது கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் கா.ப.அருளரசு, வேளாண்மைதுறை இணை இயக்குநர் அகண்டா ராவ், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

