நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 2023- 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று வெளியிட்டார்.
நாகப்பட்டினம் ஜனவரி 5
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜனவரி 2023-1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (05.01.2023) காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள்உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்இன்று வெளியிடப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 651 வாக்கு சாவடிகள் உள்ளன. மொத்தம் 558930 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 272650 ஆண்களும் 286258 பெண்களும் முன்றாம் இனத்தவர்கள் 22 பேர்களும் உள்ளனர்.
நாகப்பட்டினத்தில் உள்ள முன்று சட்டமன்ற தொகுதிகளில் முறையே கீழ்க்கண்டவாறு வாக்காளர்கள் உள்ளனர்.
வ.
எண்
சட்டமன்ற தொகுதியின் பெயர்
ஆண்
பெண்
இதரர்
மொத்தம்
1
163. நாகப்பட்டினம்
93331
99439
20
192790
2
164. கீழ்வேளுர்
85652
89474
2
175128
3
165.வேதாரண்யம்
93667
97345
0
191012
மொத்தம்
272650
286258
22
558930
மேலும் 01.01.2023-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற உள்ள தொடர் திருத்தத்தில் பொதுமக்கள் தங்களின் பெயர்சேர்த்தல் நீக்கம் திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் சமர்ப்பித்தோ அல்லது இணையதள முகவரியிலோ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்கள்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

