நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜனவரி 3
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 231 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நாகப்பட்டினம் வட்டத்தில், செல்லூர் கிராமத்தை சேர்ந்த மல்லிகா க/பெ தவமணி, யுகேஷ் த/பெ சிவராமமூர்த்தி, மற்றும் சின்னப்பொண்ணு, நாகூர் கிராமத்தை சேர்ந்த பார்வதி க/பெ அஞ்சான் ஆகியோருக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை திருக்குவளை வட்டத்தில், ஏரித்திடல் கிராமத்தை சேர்ந்த ஏ.சுப்ரமணியம் என்ற மாற்றுத்திறனாளிக்கு பார்வையற்றோருக்கான கருப்பு கண்ணாடி, ஊன்றுகோல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினையும், தொழுதூர் கிராமத்தை சேர்ந்த என்.வீரையன் என்ற மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோலினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் அரசு விழாவினை துவக்கி வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் போன்றவை வழங்கிய நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் வட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மஞ்சள் நிலா குழு மற்றும் வேதாரண்யம் நகராட்சியை சேர்ந்த பங்காரு அடிகளார் குழு ஆகிய குழுக்கள் மணிமேகலை விருதுகள், சான்றிதழ் மற்றும் தலா ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும்; அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

