ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஓசபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!!
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலதை அடுத்து செட்டிப்பள்ளி
ஊராட்சிக்கு உட்பட்ட ஓசபுரம் கிராமத்தில் சீதா தேவி சமேத்தா ஸ்ரீ ராமலட்சுமணன் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் 32 அடி ஆஞ்சநேயர்சிலை உள்ளது. இந்த சிலைக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூ அலங்காரங்கள் செய்து சிறப்பு பூஜைகள் பஜனைகள் வைத்து அதில் ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். கானவரும் பக்தர்களுக்கு தீர்த்தம்,பிரசாதம், மற்றும் அன்னதானம் வழங்கினர்.

இவ்விழாவில் கெலமங்கலத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

