முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ரூ.20,000 மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அதிமுகவினர் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தியும், அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள்; வழங்கியும் வருகின்றனர்.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மத்திய தெற்கு பகுதி அவைத் தலைவர் J.J.குமார் செய்திருந்தார்.
உற்சாகத்துடன் கிரிக்கெட் உபகரணங்களை பெற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர்கள் அதிமுக நிர்வாகிகளுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


