• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்துநிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும் – அமைச்சர் நேரு ஆய்வுக்குப் பின் தகவல்!!!

policeseithitv by policeseithitv
January 2, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்துநிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும் – அமைச்சர் நேரு ஆய்வுக்குப் பின் தகவல்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, ஜன,2

மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய சாலைகள், மின் விளக்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், வாகன காப்பகம், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பல கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகர பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையம் முழுமையாக அகற்றப்பட்டு புதிய பொலிவுடன் அனைத்து வசதிகளுடன் நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய அடுக்குமாடி பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு ஏற்கனவே ஒருமுறை ஆய்வு மேற்கொண்டுள்ளார். இரண்டாவது முறையாக மீண்டும் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், எம்எல்ஏ சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, நகராட்சி-மாநகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர் அமைச்சர் நேரு அளித்த பேட்டியில்: தூத்துக்குடி புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் சிதம்பரநகர் வணிக வளாகம் ஆகிய இரண்டும் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவு பெற்றுவிடும் என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மார்ச் மாதத்தில் இரண்டும் திறக்கப்படும். ஸ்மார்ட் திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு 10 மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் முறையாக ஏலம் விடப்பட்டு வழங்கப்படும். அதே போல் பாதாள சாக்கடை திட்டமும், மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும். வாகன காப்பகம் டென்டர் மூலம் வழங்கப்படும். அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், மாநகராட்சி ஆணையரின் நேரடி பார்வையில் செயல்படும்; என்று கூறினார்.

நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கஸ்தூரிதங்கம், துணை அமைப்பாளர்கள் வக்கீல்கள் சீனிவாசன், சுபேந்திரன், அந்தோணிகண்ணன், ராமர், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், பிரபு, சக்திவேல், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், ஆர்தர்மச்சாது, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வகுமார், சேர்மபாண்டியன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சிராணி, விஜயகுமார், ராஜதுரை, ஜெயசீலி, தெய்வேந்திரன், சோமசுந்தரி, முத்துவேல், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு, சுப்பையா, வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், கீதாசெல்வமாரியப்பன், முத்துராஜா, முக்கையா, பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், நவநீதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி மற்றும் கருணா, அல்பட் மணி பிரபாகர், ஜோஸ்பர், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், மாநகராட்சி பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருச்செந்தூரில் நடைபெறும் பல்வேறு பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார்.

Previous Post

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Post

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ரூ.20,000 மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.

Next Post
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ரூ.20,000 மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ரூ.20,000 மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In