தூத்துக்குடி.
2023ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பை இந்தியா உட்பட பல வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள், தமிழர்கள் கொண்டாடுவது வழக்கமான நடைமுறையில் இருந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டு பழைய நட்பையும், புத்தாண்டில் புதுப்பித்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


இச்சந்திப்பில் கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காலக்கட்டத்தில் ஊடகத்துறையில் உள்ள செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஊடகவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிய வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர்களை தூத்துக்குடி பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், மூத்த பத்திரிகையாளர் கண்ணன் உள்ளிட்ட பல பத்திரிகைத் துறையை சேர்ந்தவர்கள் செய்த உதவியை மறக்காமல் நினைவு கூர்ந்தனர். இதே போல் இனிவரும் காலங்களிலும் பத்திரிகைத் துறையில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அரசு சார்ந்த சலுகைகள் கிடைத்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

