• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன் – திமுகவின் இரும்பு கோட்டையாக மாற்றிக்காட்டிய பெண் மாவட்ட செயலாளர் – உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

policeseithitv by policeseithitv
December 31, 2022
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன் – திமுகவின் இரும்பு கோட்டையாக மாற்றிக்காட்டிய பெண் மாவட்ட செயலாளர் – உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவனின் தந்தை மறைந்த மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி 1986ல் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பழைய பேருந்து நிலையத்தை சீரமைத்து பொதுமக்களின் சிரமங்களை போக்கியவர். அதுபோல் வடக்கு பகுதியில் செல்வதற்கு வசதியாக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. மாநகரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
பின்பு எம்எல்ஏ-வாக இருந்த சமயத்தில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மருத்துவ கல்லூரி, கடல்சார் பயிற்சி கழகம், ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகம், உழவர் சந்தை, நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய பாலம் உள்ளிட்ட பல சாதனைகளுக்கு இடையில் ஐந்து கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகர பகுதியில் இணைக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டது.
அவரது வழியில் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கீதாஜீவன் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற பின்பு சிறப்பாக பணி செய்ததற்கு அப்போதைய மத்திய அரசிடம் இருந்து விருது பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.


அதன்பின் 2006ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கீதாஜீவன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகாலம் பணியாற்றினார். அப்போது திமுக ஆட்சியில் பெண்களுக்கான கர்ப்பிணி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை என உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்படுத்தினார்.
மக்களின் மனநிலைக்கு ஏற்ப பணியாற்றி வரும் திமுக ஆட்சி காலத்தில் 2வது குடிநீர் திட்டம், 3வது குடிநீர் திட்டம் தூத்துக்குடி மாநகர பகுதிக்கு செயல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 26 ஆண்டுகளாக அரசியல் என்ற பொது வாழ்க்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் கீதாஜீவன் எல்லோரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். தற்போது கலைஞரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பெண் சிங்கம் என்று 2 முறை புகழாரம் சூட்டினார். இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்களில்; ஒரே ஒரு பெண் மாவட்ட செயலாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு கீதாஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த என்.பெரியசாமி காலத்தில் எட்டையாபுரம் சாலையில் கலைஞர் அரங்கம் கட்டினார். கீதாஜீவன் இரண்டாவது முறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின் கலைஞர் அரங்கம் முன்பு கலைஞரின் முழுஉருவ வெண்கல சிலை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்கரங்களால் திறந்து வைக்க முயற்சி மேற்கொண்ட பெருமை அமைச்சர் கீதாஜீவனையே சாரும்.
தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சமுதாய மக்களுக்கு சொந்தமான கோவில்களுக்கும், மற்றும் கிறிஸ்தவ மதம், இஸ்லாமியர்கள் என பாகுபாடு பார்க்காமல் உதவி என்று கேட்டு வரும் அனைவருக்கும் உதவுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அதேபோல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய அங்கன்வாடிகள், சாலை வசதிகள், கால்வாய் வசதிகள், என அனைத்தையும் முறையாக பயன்படுத்தி பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் அரசுக்கு கோரிக்கையாக வைத்தார்.
அதேபோல் திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த 2015லில் எதிர்பாராத வகையில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பின் போது தனது சொந்த பணத்திலிருந்து பலகோடிகள் செலவு செய்து பல பகுதிகளுக்கு சொந்தமாக நீரை அகற்றும் மின் மோட்டார்கள் வாங்கி கொடுத்தார். அதேபோல் கடந்த வருடம் பெய்த மழையின் போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பல்வேறு உதவிகளை செய்தது மட்டுமின்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பல்வேறு பகுதி மக்களுக்கு பொருளுதவி, நிதியுதவி, என பல பணிகளை செய்தார்.
கடந்த ஆட்சி காலத்தில் மாநகராட்சி ஆணையரை பலமுறை நேரில் சந்தித்து பாரபட்சிமின்றி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். எல்லோருக்கும் உதவி கரம் நீட்டும் கீதாஜீவனுக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமின்றி பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் தூத்துக்குடியில் லாரி முணையம் அமைக்கப்படும், கப்பல்கட்டும் தொழிற்சாலை அமைக்கப்படும், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும், டபிள்யுஜிசி ரோடு சாலைக்கு வஉசி சாலை என பெயரிடப்படும், ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்துக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும், என்று தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் அமைச்சர் கீதாஜீவன்.
தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் திமுகவினர் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மாவட்டத்தை திமுகவின் இரும்பு கோட்டையாக மாற்றியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோருடன் பல்வேறு ஆலோசனைகளை கேட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றி வருகிறார்.

Previous Post

எடப்பாடி பழனிச்சாமியை தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Next Post

வேதாரண்யத்தில் கலை இலக்கியப் பெருமன்றம்  சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

Next Post
வேதாரண்யத்தில் கலை இலக்கியப் பெருமன்றம்  சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

வேதாரண்யத்தில் கலை இலக்கியப் பெருமன்றம்  சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In