வேதாரண்யத்தில் கலை இலக்கியப் பெருமன்றம்
சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா
வேதாரணியம் டிசம்பர் 31
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது.
வேதாரண்யத்தில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் பாரதியார் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவுக்கு கவிஞர் வி.புவனேஸ்வரி தலைமை வகித்தார்.
புலவர் அரு.கந்தசாமி,மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார்,கவிஞர் த.சுகன்யா,கவிஞர் ர.அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில்,தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் மாநில நிலையில் முதலிடம் பெற்ற ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கு.அபிநயாவை கொளரவித்த அரசுக் கல்லூரி பேராசிரியர் ப.பிரபாகரன் பாராட்டிப் பேசினார்.

வாங்க பேசுவோம்- பாடுவோம் எனும் தலைப்பிலான அமர்வில் கவிஞர்கள் கோவி.ராசேந்திரன்,அ.கோமளவள்ளி,பண்டேரிநாதன்,இரட்டை சகோதரிகள் நவீனா,நகீனா ஆகியோர் பாராதியாரின் பாடல்களை பாடினர்.
பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் தென்னடார் அம்பிகாபதி,மாவட்ட துணைத் தலைவர் ப.பார்த்தசாரதி,கிளைத் தலைவர் த.குழந்தைவேலு,சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கருணாகரன்,கவிஞர்கள் சு.பாலாஜி,சு.பாஸ்கர், அ.மா.குணசேகரன்,நல்லாசிரியர்கள் வீ.வைரக்கண்ணு,எஸ்.செல்வராசு, வீ.சத்தியராஜ்,கே.பாலசுப்பிரமணியன்,துணைச் செயலாளர் தி.செந்தில்நாதன், ஜி.கார்த்திகேயன்,சு.இராமசாமி,ஜி.கே.பாலா,ச.ஆரோக்யசாமி,கவிஞர் கு.மா.கிருஷ்ணன்,கவிஞர் அசோக்,கோ.ப.ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

