நெல்லை மாநகரில் போலீசார் துணை ராணுவப்படையோடு சேர்ந்து தீவிர வாகன சோதனை. பணப்பட்டுவாடா பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை எதிரொலியாக இந்த வாகன சோதனை நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் நேரத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொறுட்டு துணை ராணுவப் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அதற்காக துணை ராணுவ படை நெல்லை வந்து இறங்கியது. நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு அவர்கள் உத்தரவின்பேரில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் துணை ராணுவ படை யோடு இணைந்து இன்று காலை தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணம் மூட்டை மூட்டையாக எடுத்துச் செல்ல படுகிறதா? இலவச பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறாதா? என்பது குறித்தும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் ராஜு பாளை ஆய்வாளர் ஆடிவேல் போக்குவரத்து ஆய்வாளர் மகேஸ்வரி உதவி ஆய்வாளர் அருணாச்சலம் மகேஷ்குமார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சப்பாணி மற்றும் காவலர்களும் போக்குவரத்து காவலர்களும் துணை ராணுவமும் உள்ளனர்.
போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சிக்காக
சிறப்புச் செய்தியாளர் கொம்பன் ராஜ்

