தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை 2021 தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காகவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அளிக்கவும்,ஓட்டுப் பெட்டிகளை பாதுகாக்கவும் இன்று காலை மத்திய ஆயுத காவல் படையைச் சேர்ந்த 90 எல்லை படை காவலர்கள், ஒரு உதவி ஆணையர் பக்ரீத் லாலா தலைமையில் அரியலூர் வந்து சேர்ந்தனர்.அவர்கள் அனைவரும் அரியலூர் மாவட்ட ஆட்சியரும் மற்றும் தேர்தல் அலுவலுருமான .இரத்னா , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோரை சந்தித்தனர். பின்னர் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அதிவீரர்கள் தங்கும் குடியிருப்பில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி அரியலூர் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


