நாகப்பட்டினம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம், டிசம்பர் 31
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.39 இலட்சம் மதிப்பீட்டிலும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.49 இலட்சம் மதிப்பீட்டிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்றதையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக்கட்டிடம் கட்டுமான பணிகளையும், சன்னதித் தெருவில் ரூ.3.32 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மற்றும் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டட பழுது நீக்கம் செய்யும் பணி மற்றும் சமையல் கூடத்தில் ரூ.35,500 மதிப்பீட்டில் கட்டட பழுதுநீக்க பணிகள் நடைபெற்றதையும், அம்பலக்காரர் தெரு சாலையை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.97 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.49 இலட்சம் மதிப்பீட்டில வீட்டிற்கு வீடு குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து திருப்புகலூர் ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும், ஊராட்சியில் உள்ள அல்லிக்குளத்தில் 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.6.62 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணிகளையும், பனங்குடி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் தூய இந்தியா இயக்கத்தின் கீழ் உறுஞ்சுக்குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆரோக்கிய பாத்திமா மேரி, எஸ்.பாலமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

