வேதாரணியம் ஜனவரி 01
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை (வயது 48) இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை
பிடிக்க சென்ற வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் மற்றும் காவலர்கள் ராஜு ஐயப்பன்,சக்திவேல் ஆகியோர் மீது தேடப்பட்டு வரும் குற்றவாளியானன செல்லத்துரை
(வயது 48)அவரது மகன் வீரக்குமார் (வயது 25)செல்லத்துரையின் மகள் கலிபிரியா(வயது 22) ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற காவல்துறையினருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.பலத்த காயமடைந்த வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கும்,மற்ற இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதைப் பற்றி தகவல் அறிந்த நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உடனடியாக கோடியக்காடு பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் குற்றவாளிகளான செல்லத்துரை , வீரக்குமார்மற்றும் கலிபிரியா ஆகியோரை வேதாரணியம் காவல்துறையினர் பிடித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர்.


வழக்கை விசாரித்த நீதியரசர் வரும் 2023 ஜனவரி 12 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறைசாலைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.
குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது குற்றவாளிகள் நடத்திய தாக்குதல் இந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

