வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் வலை காணாமல் போனதால் வலையை தேடி சென்ற மீனவர்கள் இலங்கை வல்வெட்டிதுறை அருகே கரை ஒதுங்கினார்கள்.
வேதாரணியம் டிசம்பர் 29
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் காவல் சரகம், கோடியகரை மீனவர் கிராமத்தில் இருந்து கடந்த 27.12.2022 ஆம் தேதி மதியம் 14.00 மணிக்கு கோடியக்கரை கடற்கரையிலிருந்து தென்கிழக்கு சுமார் 15 NM தொலைவுக்கு மீன் பிடிக்க சென்ற,பாண்டியன்,(வயது 46) த/பெ கோவிந்தராஜ், மீனவர் காலனி, பெருமாள் பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் என்பவருக்கு சொந்தமான
IND-TN06-MO-4095 என்ற படகில் அவரும் அவருடன்
சக்திவேல்,(வயது 20) த/பெ பொம்ம நாட்டான், மீனவர் காலனி, வானகிரி,
சக்திவேல், (வயது 40) த/பெ அஞ்சப்பன், வானகிரி,
திருச்செல்வம், (வயது 25) த/பெ சந்திரசேகர், பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்
ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது வலை காணாமல் போனதால், வலையை தேடி சென்றவர்கள்
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டி துறை ஆதி கோவிலடி கடற்கரைக்கு இன்று 29.12.2022 ஆம் தேதி காலை 07.00 மணிக்கு கரை ஒதுங்கி உள்ளார்கள். இவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படவில்லை.

மேலும் மேற்கண்ட மீனவர்களை வலுவெட்டி துறை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

