• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுடலையாண்டி கோரிக்கை

policeseithitv by policeseithitv
December 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுடலையாண்டி கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, டிச.28-

தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று முன்னாள் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுடலையாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி – திருச்செந்தூர் மற்றும் துறைமுகம் -மதுரை பைபாஸ் சந்திக்கும் உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை வரவேற்கிறோம். அந்த பணிகள் நடைபெறும் அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றன. அவ்வாறு வாகனங்கள் செல்லும் வழித்தடத்தில் முறைபடுத்தல் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் தினசரி அவதிபடுகின்றனர். அப்பகுதியில் மழைநீர் தேங்கி சாலைகள் ஒரு அடிக்கு மேல் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதால் தொடர்ந்து அங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். சமீபத்தில் மட்டும் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதி மட்டுமல்லாமல் துறைமுக பைபாஸ் சாலை முழுவதும் மின் விளக்குகளே இல்லாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை சிறப்பு கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுத்து விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழையகாயல் அருகே கோவங்காடு விலக்கு மதிகெட்டான் ஓடை பகுதியில் தொடர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஒரே குடும்பத்தில் 4பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து விபத்துகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அந்த மனுவில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சுடலையாண்டி தெரிவித்துள்ளார்.

Previous Post

தூத்துக்குடியில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று திருப்பூண்டி, கோவில்பத்து, ஆறுகாட்டுத்துறை ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In