• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

policeseithitv by policeseithitv
December 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

நாகப்பட்டினம் டிசம்பர் 26

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 195 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் வட்டத்தில், நிர்த்தனமங்களம் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி சுப்பிரமணியன், மஞ்சக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த திருமதி ரம்யா க/பெ கணேசமூர்த்தி, வேதாரண்யம் வட்டத்தில், மந்தியதோப்பு கிராமத்தை சேர்ந்த திருமதி பத்மாவதி க/பெ அருள்ராஜ், கரியாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி க/பெ கலைச்செல்வன் மற்றும் கீழ்வேளுர் வட்டம், கூத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமதி சித்ரா க/பெ கிருஷ்ணமூர்த்தி ஆகிய மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.30,500 மதிப்பீட்டிலான, தலா ரூ.6,100 மதிப்புள்ள தையல் இயந்திரங்களையும், நாகப்பட்டினம் வட்டம், புத்தகரம் கிராமத்தை சேர்ந்த கொ.அல்லிமுத்து என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,100 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிளினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தொடர்ந்து இந்திய குழந்தைகள் நலசங்கம் சார்பில் 30.11.2022 அன்று நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான வர்ணம் தீட்டுதல் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Post

கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து சி.த.செல்லப்பாண்டியன் நேரில் வாழ்த்து

Next Post
கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து சி.த.செல்லப்பாண்டியன் நேரில் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து சி.த.செல்லப்பாண்டியன் நேரில் வாழ்த்து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In