நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 26
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இவ்விழாவின் போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து 2022-23 சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மாநில கோரிக்கையின் போது மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா நடத்தப்படும் என்று மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை தொடர்ந்து நம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் பள்ளிகள் அளவிலும், வட்டார அளவிலும் மற்றும் மாவட்ட அளவிலும் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவில் 2712-2022 முதல் 30-12-2022 வரை நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள். இன்றய தினம் முதற்கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 40 பள்ளிகளில் இருந்து 343 மாணவ-மாணவியர்கள் மதுரை, கோயமுத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்; அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பி.செல்வராஜ்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

