நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள
சுனாமி நினைவுப் பூங்காவில் 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நாகப்பட்டினம் டிசம்பர் 26
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 26.12.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் 18-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சுனாமி நினைவுப் பூங்காவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து, கடந்க 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கி பயிலும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகிழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீ தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், வட்டாட்சியர் பேரிடர் மேலாண்மை துறை ரமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

