பதினெட்டாம் ஆண்டு சுனாமி நினைவு தின அஞ்சலி மற்றும் பேரணி.
வேதாரணியம் டிசம்பர் 26
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆற்காட்டுதுறையில் சுனாமி பேரலை தாக்கி உயிரிழந்த பல பேரின் நினைவு அலைகளை நினைவு கூறும் வகையில் பதினெட்டாம் ஆண்டு சுனாமி தினத்தில் முன்னாள் அமைச்சரும் வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினருமான O.S.மணியன்
கடற்கரையில் உயிரிழந்தவர்களின் நினைவாக
கடலில் பால் தெளித்து அவர்களின் நினைவு சின்னத்தில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் ஏராளமனோர்
கலந்து கொண்டனர். வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஏ.வி.எஸ் அனந்தராமன் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயராஜ், மீனவ நல உரிமை சங்க பொறுப்பாளர்கள் ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் கோடியக்காடு, கோடியக்கரை ஊர் பொதுமக்கள் ஆகியோர்கள்
கடற்கரையில் உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.



மேலும் வேதாரண்யத்தை அடுத்த ஆறுக்காட்டுதுறையில் ஆறுக்காட்டுதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளின் மௌன ஊர்வலம் முக்கிய வீதியில் வழியாக வந்து நினைவு சின்னத்தை வந்தடைந்தது. இந்த மௌன ஊர்வலத்தில் வேதாரணியம் நகர மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி,
நகராட்சி ஆணையர் ஹேமலதா, கடலோர பாதுகாப்பு குழுமம் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்,அன்பரசு,ஆற்காட்டுத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் ஊர்வலமாக நடந்து வந்து
கடற்கரையில் நினைவு சின்னத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக பூக்களை தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

