நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் சமுதாயகூடத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்; அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் டிசம்பர் 25
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் சமுதாயகூடத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது. இளைஞர் திறன் திருவிழாவானது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா தமிழக அரசால் நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் இளைஞர்கள் மத்தியில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகும்.

அந்தவகையில் தகுதியான இளைஞர்களுக்கு தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு என்பது அனைவருக்கும் உள்ளது. அதனை சரியான முறையில், சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு அனைவருக்கும் உண்டு. எனவே அனைத்து இளைஞர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்ட 412 நபர்களில் 135 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடவும் பயிற்சி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்ய்ப்பட்ட நபர்களுக்கு தொழில் திறன் சேர்க்கை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் வழங்கினர்.
அதன் பின்னர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியினையும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஞா.செல்வராணி ஞானசேகரன், கிழையூர் ஊராட்சிமன்றத் தலைவர் பி.ஆனந்தஜோதி, உதவி இயக்குநர் திறன்வளர்ப்பு செந்தில்குமாரி, உதவி திட்ட அலுவலர்கள் பா.பாலன், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

