தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில்
2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து- சகோ.மோகன்.
சி.லாசரஸ் வழங்கினார்.
நாலுமாவடி,டிச,25
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வைத்து 2 ஆயிரம் பேருக்கு சகோ. மோகன்.சி.லாசரஸ் விருந்து வழங்கினார்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் ஏழை-எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதே போன்று இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி காலை 7 மணி முதல் நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன். சி. லாசரஸ் தலைமை வகித்தார். பின்னர் அவர் பிரார்த்தனை செய்து கிறிஸ்மஸ் விருந்தை துவக்கி வைத்தார்.
நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏழை -எளிய மக்கள் குறிப்பாக அனைத்து மதத்தை சார்ந்தவர்களும், குழந்தைகளும் பெண்களும் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன. கிறிஸ்மஸ் விருந்து நடைபெறும் இடத்தில்
இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன். சி. லாசரஸ் ஒவ்வொருவருக்கும் தனது கரங்களால் உணவுகளை பரிமாறினார். பின்னர் அங்கு வந்திருந்த அனைத்து மக்களுடன் சரி நிகர் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் கிப்ட் வழங்கினார்..மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து அவர்களுக்கு ஜெபம் செய்தார்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை
இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர், புது வாழ்வு சங்க நிர்வாகிகள், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

