வேதாரண்யம் டிசம்பர் 23
திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான், தலைமையில் வனவர்கள் ராமதாஸ், செல்வி மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி இளக்கியா, வேட்டை தடுப்பு காவர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் இன்று தாணிக்கோட்டம் கிராமம் ஜீவா நகரை சேர்ந்த தம்புசாமி த/பெ லெட்சுமணன் சுமார் (வயது 49) என்பவர் தாணி கோட்டக வயல்வெளியில் கண்ணி வைத்து மடையான் பறவை ஒன்றினை பிடித்தபோது வனச்சரக அலுவலர் பா. அயூப் கான் தலைமையிலான வனக்குழுவினர் மேற்கண்ட நபரை பிடித்து விசாரணை செய்து, இந்திய வனஉயிரி பாதுகாப்பு சட்ட படி வழக்குபதிவு செய்து நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி அபராதமாக (இணக்க கட்டணம்) ரூ 20,000/= வனச்சரக அலுவலரால் விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

