தூத்துக்குடி,டிச,22
தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு கார் தாக்கப்பட்டதில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீதுகாவல் நிலையத்தில் புகார். அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்டது.
தொடர்பாக பாஜக பிரச்சார பிரிவு மாவட்டச் செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இசக்கி ராஜா, ராமகிருஷ்ணன், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் பெற்றுக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பாஜக துணைத் தலைவர் சசிகலா புஸ்பா வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் காலதாமதம் படுத்தினால் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் தாக்குதல் சம்பவத்தில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் மீது பாஜகவினர் கொடுத்த புகார் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக பாஜக மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தி தொகுப்பு
போலீஸ் செய்தி சிறப்பு செய்தியாளர்

