தூத்துக்குடி வஉசி துறைமுகம் பன்னாட்டு சரக்கு பெட்டகம் கையாளும் நிலைக்கு உயர்த்தப்பட உள்ளதாக கோவையில் நடைபெற்ற விழாவில் அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு தூத்துக்குடி அனைத்து தொழில் வர்த்தக சங்கங்களின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் கௌரவ செயலாளர் ஜோ வில்லவராயர் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி துறைமுகத்தை பன்னாட்டு சரக்கு பெட்டகம் கையாளும் நிலைக்கு உயர்த்துவதாகும் மத்திய அரசாங்கம் இந்தியா தன்னிலை அடைய ஆத்ம நிர் பாரத் துறைமுகங்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் எல்லா தகுதிகளும் பெற்றுள்ள தூத்துக்குடி வ உ சி துறைமுகத்திற்கு இந்த அங்கீகாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் புவியியல் இருப்பிடம் மிகச் சரியாக அமைந்துள்ளது. இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளதால் பன்னாட்டு கடல் பாதையை ஒட்டி உள்ளது. அனைத்து வானிலையும் தாங்கக்கூடிய துறைமுகம் நம் அருகாமையில் உள்ள இலங்கை புயல், சூறாவளி சுனாமி ஆகியவற்றைதான் வாங்கி கொண்டு நம்மை காப்பாற்றிவிடுகிறது . இதனால் காலநிலையின் எந்த விதமான பாதிப்பும் இன்றி இந்தியாவில் வருடம் முழுவதும் செயல்படும் ஒரே துறைமுகம்.
துறைமுகத்தை ஆழப்படுத்தினால் போதுமானது – அதிக பராமரிப்பு செலவில்லாமல் செய்ய கூடிய அளவில் இத்துறைமுகம் இயற்கையாகவே அமைந்துள்ளது. துறைமுகத்தை சுற்றி ஏராளமான நிலம் கையிருப்பில் உள்ளது. திறமையான தொழிலாளர் கள்தென் தமிழகத்தில் உள்ளனர் அவர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள். நான்கு வழிச்சாலை, இரட்டை பாதை அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. விமான தளம் விரிவாக்கம் நடைபெறுகிறது.மதுரை, திருச்சி திருவனந்தபுரம் விமான நிலையங்கள் (பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சேவை) அருகில் உள்ளன.
சிறப்பு பொருளாதார மையங்கள், சரக்கு கிடங்குகள், குளிர் சேமிப்பு கிடங்குகள், ஏராளமானவை தூத்துக்குடியில் உள்ளன. தமிழக அரசின் திட்டமான சென்னை – கன்னியாகுமரி தொழில் மையம் பல வகையில் இந்த துறைமுகத்துக்கு துணையாக இருக்கும். இந்தியாவின் 60% சரக்கு பெட்டகங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கு செல்கிறது, இதனால் ஏற்றுமதியாளர்களுக்குசராசரியாக ஒரு பெட்டகத்திற்க்கு 7.500 டாலர் அதிக செலவு ஆகிறது. இது நமது ஏற்றுமதி, இறக்குமதி விலையை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் அந்நிய செலாவணி மிச்சமாகபேருதவியாக இருக்கும்.
இதன் மூலம் தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். இதற்காக பிரதமருக்கும், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக்லால் மாண்டவியாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழக முதலமைச்சர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், தூத்துக்குடி வஉசி துறைமுகம் தலைவர் அனைவர்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர். துணைத் தலைவர் எட்வின் சாமுவேல், நிர்வாக செயலாளர் ஜெயந்த் தாமஸ், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் பிஎஸ்டிஎஸ்டி வேல்சங்கர், ஜோ பிரகாஷ், டிஆர் தமிழரசு, டிஆர் கோடீஸ்வரன், சேசைய்யா வில்லவராயர், செலஸ்டின் வில்லவராயர், கிருஷ்ணசங்கர், ஆனந்த முராய்ஸ், ஸ்ரீதர், சசிகுமார், ராஜ்குமார் ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர்.

