தூத்துக்குடி அருகே தாதுமணல் கழிவு ஏற்றி வந்த 3 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பூர்ணவேல், புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த 3 லாரிகளை வழிமறித்து அவர் தணிக்கை செய்தார். அந்த லாரியில் தாதுமணல் கழிவுகள் இருந்தன.
அதனை எடுத்து செல்ல எந்தவித முறையான ஆவணங்களும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள், அந்த லாரிகளை பறிமுதல் செய்து புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

