கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக் கொடை விழா நேற்று முதல் மார்ச் 03 ம்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று காலை மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர். தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டார். விழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்துகொண்டார்.
விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சிறப்பாக செய்திருந்தார். அதன்படி அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்பட 594 பேர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
கோவில் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அதில் பொது மக்கள் தங்கள் பாதுகாப்பு, சந்தேகங்கள், குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

