தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மேயர் ஆய்வு செய்தார் மண்டல அலுவலகத்தில் வைத்து மண்டல அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி சொத்துவரி, தண்ணீர் கட்டண வசூலை துரிதப்படுத்துமாறும்.
பிளான் அப்ரூவல் குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடுமாறும் தெரிவித்தார். பின்னர் முள்ளக்காடு எதிரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள குளம் தற்போது சீரமைக்கப்பட்டு வருவதனை மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் பார்வையிட்டு கீழ்கண்ட அறிவுரைகளை வழங்கினார்.


குளத்தின் மேல்பரப்பு முழுவதும் பேவர்பிளாக் சாலை அமைத்து அதன் ஒரத்தில் கைப்பிடி கம்பிகள் வைத்து பொதுமக்கள் ஒய்வெடுக்க ஏதுவாகவும், பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகள் பயன்படுத்த கழிப்பறைகள் அமைக்கவும், சுற்றிலும் மரங்கள் வைத்து, பென்சிங் அமைத்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறித்தினார்.
உடன் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துவேல், 54வது மாமன்ற உறுப்பினர் விஜய குமார், 55வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜதுரை, 56வது மாமன்ற உறுப்பினர் சுயம்பு, 58வது வார்டு மாமன்ற உறுப்பினர் பட்சிராஜ் மற்றும் 52வது வார்டு மாமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன் மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமசாந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி. உதவி செயற்பொறியாளர் குறள் செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

