தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வினோத் மற்றும் பா.ஜ.க. மண்டல் நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பாஜக வடக்கு மண்டல தலைவர் வினோத், தலைமையில் மண்டல செயலாளர் ரவிச்செல்வம், இளைஞரணி தலைவர் அஜித்குமார், ராமேஸ்வரன், பாலா, சூர்யா, உள்ளிட்ட 30 பேர் பாஜகவில் இருந்து விலகி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்;ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த பாஜகவினரை வரவேற்ற அமைச்சர் கீதாஜீவன் திமுக கலர் சால்லை அணிவித்தார். வரும் தேர்தலில் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். நல்ல பணி செய்யும் போது பொறுப்புகள் தானாக வந்து சேரும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரிதங்கம், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், நாகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர், மற்றும் வீரபாகு, கருணா, அல்பட், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

