தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அவசரக் கூட்டம் தலைவர் சரவணக்குமார் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் தினமும் சேரும் குப்பைகளை அகற்ற கூடுதல் டிராக்டர் நடை, வாடகை உயர்த்தித்தர கலெக்டர் செந்தில்ராஜுடம் அனுமதி கோருவது குறித்து தலைவர் சரவணக்குமார் தலைமையில் 15 உறுப்பினர்கள் கலந்து ஆலோசணை செய்தனர்.
இதில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஊராட்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி குக்கிராமங்களில் தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கு தினசரி மூன்று டிராக்;டர் வாகனங்கள் மூலம் ஒரு நாளைக்கு 1 டிராக்;டருக்கு 4 நடை என 12 நடைகளும், ஒரு நடைக்கு கூலி, டீசல், டிராக்டர் வாடகை உட்பட ரூ.800- வீதம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதல்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளுடன், அரசின் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி ஊராட்சியின் குக்கிராமங்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் தற்போது டீசல் விலை உயர்வு, வண்டி வாடகை உயர்வு, கூலி உயர்வால் இப்பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்ப்பட்டு வருகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சணைகள் ஏற்ப்படாமல் தடுக்கவும், கிராமங்களை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்கவும் 1 நாளைக்கு 12 நடை குப்பை அள்ளும் பணியை காலத்தின் சூழ்நிலைக் கருதி ஒரு நாளைக்கு குப்பை அள்ளும் டிராக்டர் நடையை 20 நடையாக உயர்த்தியும், ஒரு நடைக்கு கூலி, டீசல், டிராக்டர் வாடகையை ரூ.1200- ஆக பொதுமக்கள் நலன் கருதி உயர்த்தி தர கலெக்டர் செந்தில்ராஜுடம் அனுமதி பெறுவது என இந்த அவசர கூட்டத்தில் 15 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.


கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச் செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள், கதிர்வேல், அருள் மிக்கேல் ஸ்டாலின், உமா மகேஸ்வரி, தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

