தூத்துக்குடி புதியதாக கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ராஜாசிங், துணைத்தலைவராக மில்லர்புரம் ராஜா, செயலாளராக ஜெயபாலாஜி, துணைச்செயலாளராக சைமன், பொருளாளராக ராயல்தினேஷ், பொதுக்குழு உறுப்பினர்களாக மணிகண்டன், பன்னீர் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு ஸ்போர்ட்ஸ் சொசைட்டி உறுப்பினர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வரும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையிலான முதல் புறா ரேஸ் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

