வேதாரண்யம் டிசம்பர் 18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்ககாரன்புலத்தில் வேதாரணியம் வட்ட பூ உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம்
நடைபெற்றது.
வேதாரணியம் பகுதி பூ உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பூக்களை வெளி மாவட்டங்களில் நல்ல விலைக்கு நம்ம ஊர் வியாபாரிகள் எப்போதும் விற்பனை செய்துவிட்டு விவசாயிகளுக்கு மிகவும் சொற்பமான தொகையை தருகின்றனர் என்றும் இதற்கு ஒரு முடிவு கட்டும் பொருட்டு கடந்த
06.12.2022 அன்று ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றும் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களும் பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளும் நல்ல வரவேற்பு கொடுத்ததாகவும் ஆனால் பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பூ எடுக்கும் வியாபாரிகள் நல்ல விலைக்கு எடுக்க முன்வரவில்லை என்றும் அதை எதிர்த்துக்
கேட்கும் போது நாங்கள் போடுவது தான் விலை என்றும்
கூறி விட்டார்கள்.
இதையெல்லாம் தட்டிக் கேட்க ஆயக்காரன்புலத்தில் 17.12.2022
அன்று வேதாரணியம் வட்ட பூ உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் துவக்கப்பட்டது.

இந்த சங்கத்திற்கு
க. புகழேந்தி தலைவராகவும் ,
ஆர் செந்தில்நாதன் துணைத் தலைவராகவும்,
தெ.ராஜேந்திரன் செயலாளராகவும் ,V.V.G.சரவணன் துணைச் செயலாளராகவும், பா. சிங்காரவேல் பொருளாளராகவும் இருக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 10 நபர்கள் செயற்குழு உறுப்பினராக இருப்பார்கள் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் ஆனந்தகுமார்,
அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அம்பரீஷ்வர் பஞ்சாப் ராஜ் விந்தர் சிங் கோல்டன் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம்
சார்பில் ரவீந்திரன் ,விவசாய சங்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அனைவரும் இங்கு உற்பத்தியாகும் பூக்கு நல்ல விலை பெற்று தருவோம் அதற்கு எந்த பிரச்சனை வந்தாலும் நாங்கள் இந்த சங்கத்திற்கு துணை நிற்போம் என்று கூறினார்கள். இந்தக் கூட்டத்திற்கு சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பூ விவசாயம் செய்பவர்கள் கலந்து கொண்டார்கள்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

