தூத்துக்குடி புதிய தமிழகம் கட்சி தொடங்கப்பட்டு 25வது ஆண்டு வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இதில் தலைவர் கிருஷ்ணசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும் தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சிக்கு செல்வாக்கு உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் கட்சிக்கு எழுச்சி கிடைத்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் நம்மை பலர் திரும்பி பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் தலைமையில் 500 வாகனங்களில் சென்று 500 மகளிர்கள் சீருடையுடன் கலந்து கொண்டனர். கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் வெள்ளி வேல் மற்றும் மலர் கிரீடம் சூட்டி அரசியலில் தொடர் வெற்றி பயணம் கிடைக்க வேண்டும் என்று வழங்கினார்.

