• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
December 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் டிசம்பர் 17

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் கலந்துக்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து 2022-23 சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மாநில கோரிக்கையின் போது மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா நடத்தப்படும் என்று மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை தொடர்ந்து நம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் பள்ளிகள் அளவிலும், வட்டார அளவிலும் மற்றும் மாவட்ட அளவிலும் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது . நாகப்பட்டினம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவில் 27-12-2022 முதல் 30-12-2022 வரை நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு, கலையரசன் மற்றும் கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கி சிறப்பித்து மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் முதல் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6-8 வகுப்புகளில் பயிலும் 18,939 மாணவர்களும், 9-10ஆம் வகுப்புகளில் பயிலும் 6,221 மாணவர்களும் 11-12 ஆம் வகுப்பில் பயிலும் 3,778 மாணவர்களும் ஆக மொத்தம் 28,938 மாணவர்கள் கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டனர். இவர்களில் மாவட்ட அளவில் 6-8 வகுப்பு வரை 93 மாணவர்களும், 9-10 வகுப்பு வரை 197 மாணவர்களும், 11-12 ஆம் வகுப்பில் 178 மாணவர்களும் ஆக கூடுதல் 468 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.

மேலும் முக்கியமாக போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் செல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா வேளாங்கண்ணி வட்டார ஆத்மா திட்ட குழு தலைவர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி

டிவிக்காக நாகை

மாவட்ட. செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை இது தான் பிஜேபியின் சாதனை அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

Next Post

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் கூட்டம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடியில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் கூட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In