தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பணியை பாராட்டும் வகையில் கல்வி இயக்க வளாகத்திற்கு அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. கொள்கை சுய மரியாதை கொண்டு திமுக பகுத்தறிவை வளர்த்து பெரியார் அண்ணா கலைஞர் என 50 ஆண்டு நட்பு கருத்துகளை பரிமாறி ஆதிக்க சக்திகளை எதிர்த்து தமிழன் இழந்த உரிமையை மீட்டெடுக்க பாடுபட்டவர் இது போன்ற வரலாறுகளை எல்லாம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் தனது கட்சிக்கு கொள்கை என்றே தெரியாமல் கோமாளிதனமாக பேசி வருகின்றனர். திமுக ஆட்சியின் சாதனைகளை நாங்கள் சொல்ல தயார். மோடி ஆட்சியின் சாதனைகளை நீங்கள் சொல்ல தயாரா? வேலை வாய்ப்பு இல்லை உரிமைகள் பறிப்பு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை இது தான் உங்கள் சாதனை மதம் ஜாதி போன்றவற்றை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைக்கிறிர்கள் அது நடக்காது திமுக ஆட்சியில் கல்வி வேலை வாய்ப்பு மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். மாற்று திறனாளிகளுக்கு 500 உயர்வு தொகை கர்ப்பினிகளுக்கு ஊட்டச்சத்து என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் 2024 தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். என்று பேசினார்.
மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் அன்பழகன் பேசுகையில் வரும் 19ம் தேதி நூறாண்டு நிறைவு தினம் கொண்டாடப்படுகிறது. 43 ஆண்டுகாலம் கட்சியின் பொதுச்செயலாளர் 4 முறை அமைச்சர் என எளிமையாக பணியாற்றியவர் ஓருமுறை சட்டமன்ற படஜெட் கூட்ட தொடரின் போது அவரது சட்டை பை பக்கம் கிழிந்திருந்தது. அதை பலரும் சுட்டி காட்ட தயங்கிய நேரத்தில் நான் தெரிவித்த போது நான் வயது முதிர்ந்தவன் தானே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். இந்தியா அனைத்து மொழிகளை கொண்ட பன்முக தன்மை கொண்ட நாடு அதில் ஒரு மொழியை மட்டும் கட்டாயமாக தினிப்பதை தான் எதிர்க்கிறோம். தமிழகத்தில் இரு மொழி கொள்கை போதுமானது தான் ஆங்கிலம் படித்த சுந்தர்பிச்சை முன்னாள் ஜானாதிபதி அப்துல்கலாம் போன்றவர்கள் சாதனை படைத்துள்ளனர். பெரியாரின் சொத்து சமஉரிமை பெண்களுக்கு முன்மொழிந்ததை கருணாநிதி நிறைவேற்றி வைத்தார். 33 சதவீத் இட ஓதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டது. அடுப்புதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்று கூறிய காலத்தை மாற்றி அனைத்து துறைக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 உறுப்பினர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கேட்டேன். 32 பேர் உள்ளார்கள் என்று கூறினார்கள். 50 சதவீதத்தை கடந்து விட்டது என்றேன். பொது வார்டில் கூடுதலாக இரண்டு பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்கள். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கஜானாவை சுத்தமாக துடைத்துவிட்டார்கள் விதை நெல் இருந்தால் தானே விதைக்க முடியும் அதுவும் இல்லாத நிலை தற்போது முதல்வர் பதவியேற்ற 18 மாதம் காலத்தில் நிதிநிலையை சீர்செய்து ஒவ்வொன்றாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார்கள் பெண்களுக்கான ஆயிரம் உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும். பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெடிகுண்டு வெடிக்கும் சம்பவங்கள் தெரிகின்றது. ஆனால் எடப்பாடிக்கு 160 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்படுவது தெரிகிறது. இதிலிருந்தே திருடர்கள் யாரென்று உங்களுக்கு புரிகிறதா? ஓரு பொருளை காவல்துறை பிடித்ததும் அவர்கள் மதிப்பீடை பின்னர் தான் தெரிவிப்பார்கள் எடப்பாடிக்கு முன்கூட்டியே எப்படி தெரிகிறது. இரண்டு பேரும் கூட்டு சதிசெய்கின்றனர். அதே போல் பாரளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 5லட்சம் கோடி போதை பொருள் பிடிப்பட்டதாக தெரிவித்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேள்வி கேட்ட நபருக்கு அப்படி எதுவும்பிடிபட்டதாக நான் கூறிவில்லையே என்று பதில் தெரிவிக்கப்பட்டது. துறை முகங்கள் வாயிலாகதான் போதை பொருள் கடத்தப்படுகிறது. அனைத்து துறைமுகங்களும் ஒன்றிய அரசின்கட்டுப்பாட்டில் தான் உள்ளது. குஜராத்தில் தனியாh துறைமுகம் ஒன்று இருக்கிறது. இதுபோன்ற கடத்தல் நடைபெறுகிறது என்றால் இதில் யார் குற்றவாளி எடப்பாடி ஆட்சி காலத்தில் சாத்தான்குளத்தில் இரண்டு பேர் அடித்து கொல்லப்பட்டு 15 நாள் அந்த காவல் நிலையம் தாசில்தார் கஷ்டடியில் இருந்தது சாதனை 13 பேர் தூத்துக்குடி சம்பவத்தில் சுட்டு கொல்லப்பட்டது சாதனை இதை தவிர 45 அடி தூரம் ஊர்ந்தே சென்று காலை தொட்டது. இந்த தொகுதியில் நிறைவேறாமல் இருந்த குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவு தளம் இஎஸ்ஐ மருத்துவமணை ஆகிய பணிகளை கனிமொழி எம்.பி தூரிதப்படுத்தி அப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் அதில் வரும் வருமானத்தை வைத்தே ஓரு மாநில அரசு பட்ஜெட் போட்டு விடலாம் அதை கிடப்பில் போட்டு வைத்த மர்மம் என்ன என்று பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் இந்திய மாநில அரசுகளில் 18 மாதத்தில் பல சாதனைகளை நம்முடைய முதல்வர் செய்துள்ளார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த பணியும் முறையாக நடைபெறவில்லை விவசாயம் செழித்தால் தான் ஒரு நாடும் வளர்ச்சியடைய முடியும் முதுகெலும்பாக இருக்கும் அத்துறைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். எல்லா துறைகளிலும் தமிழகம் முதலிடம் இன்றைய தினம் கூட வந்த கருத்து கணிப்பில் அதைத்தான் கூறியுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாங்கள் சாதனை செய்தோம் என்று அதிமுக கூறுகிறது. எந்த பணியிலும் மாநில அரசு பங்களிப்பு இல்லாமல் நடைபெறமுடியாது இந்த திட்டத்தில் முறையாக பணிகள் பல நடைபெறாமல் இருந்ததால் ஏற்பட்ட மழை நீர் பாதிப்பை முதல்வராவதற்கு முன்பும் முதல்வாரன பின்பும் ஸ்டாலின் பார்வையிட்டு பல ஆலோசனைகளை வழங்கினார். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் நீர்தேங்காமல் இருப்பதை போல் தூத்துக்குடியிலும் அதுபோல் பணிகள் நடைபெற்றுள்ளன.இரண்டாவது முறையாக பர்னிச்சர் பார்க் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த முதல்வர் அந்த இடங்களை மீண்டும் பார்வையிட்டார். பிஜேபி கட்சியை சேர்ந்தவர்களும் அதன் தலைவரும் ஓரு பொய்யை பல முறை சொல்லிக்கொண்டே வருகின்றனர். அவர்களுக்கு உடனுக்குடன் தக்க பதிலடியை நாம் கொடுக்க வேண்டும். என்றார். தலைமை கழக பேச்சாளர்கள் ராஜசேகர், இருதயராஜ், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், உள்பட பலர் பேசினார்கள்.


கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்டஅவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவிந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, பிரதீப், ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சின்னத்துரை, ராமர், பார்வதி, சரவணன், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகேபரியேல்ராஜ், அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, டேனி, பிரபு, தேவதாஸ், சக்திவேல், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், பால்மாரி, ஆர்தர்மச்சாது, சங்கரநாராயணன், பிக்அப் தனபால், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல். சேர்மபாண்டியன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சிராணி, விஜயகுமார், ராஜதுரை, ஜெயசீலி, தெய்வேந்திரன், கந்தசாமி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு, சுப்பையா, வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், சிங்கராஜ், கங்காராஜேஷ், கீதாசெல்வமாரியப்பன், டென்சிங், முத்துராஜா, முக்கையா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா, கன்னிமரியாள், டோலிசங்கர், மற்றும் அல்பட் மணி மகேஸ்வரசிங், பிரபாகர், உலகநாதன், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

