• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

policeseithitv by policeseithitv
December 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

.

நாகப்பட்டினம் டிசம்பர் 14

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேத்தாக்குடி வடக்கு ஊராட்சி கல்லுளிக்காடு பகுதியில் உள்ள மாவடி வாய்க்காலில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டடம் கட்டும் பணி நடைபெறுவதையும், அம்மா கவுண்டர் காடு கிராமம் முதல் இளந்தோப்பு கிராமம் வரை 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.5.42 இலட்சம் மதிப்பீட்டில வீட்டிற்கு வீடு குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறுவதையும், தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேலவெளி கிராமத்தில் உள்ள எஸ்.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.4.24 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிழலகம் அமைக்கப்பட்டுள்ளதையும், செட்டித் தெரு சாலையில் 86 மீ தொலைவிற்கு ரூ.4.15 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலையாக அமைக்கும் பணி நடைபெறுவதையும், செட்டித் தெருவில் உள்ள வண்ணான் குளத்தினை ரூ.13.83 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதையும், பண்ணைவெளி குளிர்குளம் ரூ.9.95 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாடு செய்யும் பணியையும், தெற்குவெளி மாங்குளம் ரூ.9.43 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாடு செய்யும் பணியையும், கீழவெளி பால் பண்ணைத் தெரு சாலையை ரூ.9.15 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலையாக அமைக்கும் பணி நடைபெறுவதையும், வடக்குவெளி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.5.71 இலட்சம் மதிப்பீட்டில் காய்கறி விற்பனை மையம் அமைக்கும் பணியையும், வேதாரண்யம் நகராட்சி அரசு மருத்துவமனை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.31.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டும் பணியையும், மூன்றாம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்துவதையும் மற்றும் உபரி வட்டித் தொகை பணியின் கீழ் ரூ.17.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டட கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


அதனை தொடர்ந்து, வேளாங்கண்ணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரை இருப்பு குறித்தும், கீழையூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராமத்தில் வரப்பில் உளுந்து பயிர் சாகுபடி செய்ததையும், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தப் பின் தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தப்பின், வேதாரண்யம் பகுதியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
முன்னதாக, நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி செயற்பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க அதிரடியாக களத்தில் இறங்கிய எஸ்.பி!

Next Post

மஹாதேவ காலமஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஸ்ரீசித்தர் பீடத்தில் 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

Next Post
மஹாதேவ காலமஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஸ்ரீசித்தர் பீடத்தில் 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

மஹாதேவ காலமஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஸ்ரீசித்தர் பீடத்தில் 64வகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In