நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 13 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை வட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் அரசு பணியாளர்களின் துறைத்தேர்வு இணையவழியாக நடத்தப்படுவதையும், திருவாய்மூர் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுவையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத்தொடர்ந்து, திருவாய்மூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகக்கட்டடத்தினையும், திருவாய்மூர் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம உதவியாளர் அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் போன்றவைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

