தூத்துக்குடி இந்துசமய அறநிலைத் துறைக்குட்பட்ட தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் திருக்கோவில் தை மாத கொடைவிழாவை யொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுரையின் படி கனிமொழி எம்.பி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி பத்திரகாளியம்மன் கோவில் சிறப்பு பூஜை ஆராதனையுடன் வரிஏடு போடுதல் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவில் விழாக்குழு தலைவர் கீதாசெல்வமாரியப்பன், துணைத்தலைவர்கள் கோபால், சக்திவேல், குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் சுரேஷ்குமார், மாரிமுத்து, செந்தில்குமரன், கந்தசாமி, ராமசந்திரன், கோமதிநாயகம், ராஜசேகர், முன்னாள் அறங்காவலகுழு உறுப்பினர் அறிவழகன், மற்றும் முருகன் யாதவ், உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

