தூத்துக்குடி. டிச.13.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ-யிடம் அதிமுக நிர்வாகிகள் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடியின் மையப்பகுதியான சிதம்பரநகர் பகுதியில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமாகிய எம்.ஜி.ஆரின் பெயரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் எம்.ஜி.ஆரின் பெயர் பலகை மட்டுமே உள்ளது. இப்பூங்காவில் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை வைப்பதற்கு அனுமதி கோரி தூத்துக்குடி மாநகர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் ஏசாதுரை தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ-யிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் வி.டி.தங்கம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் ஜோசப், வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் அந்தோணி செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர், முன்னாள் மாவட்ட கழக இணைச்; செயலாளர் உமா கண்ணன், முன்னாள் கவுன்சிலர் கமலக் கண்ணன், முன்னாள் வட்ட செயலாளர் தமிழரசன், தொழிற்சங்கம் கப்பல்ராஜன், தர்மசீலன், வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர், ஆறுமுக துரை, கருணாகரன் மாப்பிள்ளையூரணி செயலாளர், தெற்கு பகுதி துணை செயலாளர் லோகுகணேசன், மட்டக்கடை மகேஸ்வரன், கிழக்கு ஒன்றி பொருளாளர் சாமுவேல், 55வது வட்ட பிரதிநிதி வெள்ளப்பாண்டி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர்கள் எம்.எஸ்.மாடசாமி, பழனிச்சாமி, வட்டக் கழக செயலாளர்கள்: முரளி, ஜெயபால், சுதாகர், அம்மா பேரவை கே.எஸ்.செல்லத்துரை, வடக்கு பகுதி இளைஞர் பாசறை செயலாளர் ரமேஷ், 17வது வட்ட அவைத்தலைவர் முத்துபட்டன், அம்மாபேரவை இசக்கிமுத்து, அமைப்பு சாரா ஒட்டுனர் அணி கிஷோர் குமார், வட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், ஆறுமுகம், லிங்கம், லியோன் அயல்குமார், சந்திரசேகர், மில்லர்புரம் ஜெயராமன், அப்துல்லாநேசன், சபிக்குமார் மற்றும் சீதாராமன் உட்பட ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.

