வேதாரணியத்தில் S.S அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்.
வேதாரணியம் டிசம்பர் 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தை அடுத்த பயத்தவரன்காடுசுப்பையா உதவி நடுநிலைப் பள்ளியில் வேதாரணியம் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் எஸ் சிவசுந்தரம் அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு வேதாரணியம் எஸ் எஸ் அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த இலவச பொது மருத்துவ முகாமில் பொது மருத்துவம், நுரையீரல் ஆஸ்துமா மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம்,
நீரிழிவு மருத்துவம், இருதய மருத்துவம், உடல் ரத்த அழுத்தம், ECG,
ECHO,இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.



இந்த இலவச பொது மருத்துவ முகாமை வேதாரணியம் வர்த்த சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவரும், S.S.அறக்கட்டளையின் நிறுவனருமான
S.S.தென்னரசு தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்ட தலைவர் S.வேதநாயகம் வேதாரணியம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல், வேதாரணியம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் சுபஹானி,தங்கதுரை மற்றும் வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள்,வேதாரணியத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்கள்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

