• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை!

policeseithitv by policeseithitv
December 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

*தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.*

 

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடந்த அமைதி வழிப் போராட்டத்தில், காவல் துறையால் 13 பேர் சுட்டும், 2 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கடந்த அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கடந்த மே-18 ல் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆணையத்தின் அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்த வாதத்தின் போது முதல்வர் அறிவித்தார். “துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்தார்.

 

ஆனால் 17-10-22 அன்று தமிழக அரசு வெளியிடப்பட்ட அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி, ஆணையத்தின் பரிந்துரையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் உண்டாக்கியுள்ளது.

 

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, வேலை வாய்ப்பு & வெளிநாடு செல்ல வழக்குத் தடை நீக்கம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட 2 வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ.1லட்சம் நிவாரணம் உட்பட பல்வேறு துயர்துடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

மக்களை கொன்றவர்கள் மீதான குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் ஆணைய அறிக்கை வந்தவுடன் தமிழ்நாடு அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மக்களை படுகொலை செய்தவர்கள் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் எனவும், கடந்த அதிமுக அரசின் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பலவீனமானது என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்றப்படும் என்றும் உறுதியளித்து இருந்தீர்கள்.

 

தங்களின் வாக்குறுதியை உண்மையானது, சரியானது, உறுதியாக நடைமுறைக்கு வரும் என்று ஏற்றுக்கொண்டோம். ஆனால், தற்போது கொலை செய்த போலீசார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அமைச்சரவையை மீண்டும் கூட்டி துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கொன்ற போலீஸார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியும், சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை அகற்றி, நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதில், ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் வழக்கறிஞர் ஹரிராகவன், ஒருங்கிணைப்பாளர்கள் பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, கிதர் பிஸ்மி, மாரிசெல்வம் மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநகர செயலாளர் முருகபூபதி, ஐஜேகே தென் மண்டல செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், பிரபு, இளங்கோ, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அகமது, தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் தயாள லிங்கம், மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 13 பேரின் குடும்பத்தினர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post

வேதாரணியத்தில் S.S அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்.

Next Post

மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு

Next Post
மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு

மக்கள் நலன் தான் முக்கியம் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உருக்கமான பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In