தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த அருணாதேவி ரமேஷ்பாண்டியன், தலைமையில் ஒட்டப்பிடாரம் கீழமுடிமண் காலிதெருவை சேர்ந்த கயல்விழி கனிமொழி எம்.பியிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில் தூத்துக்குடியில் 22.5.2018 அன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு கொடுங்காயம் அடைந்து பின் அரசு மருத்துவமணையில் 3 மாதம் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்து அதனை தொடர்ந்து அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து சிகிச்சை பலன் இன்றி ஜஸ்டின் செல்வமிதிஷ் மரணமடைந்தார்.
இதற்கு தமிழக அரசு ஸ்டெர்லைட் போராட்டத்தில் மரணமடைந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடாக 20 லட்சமும் அரசு பணியும் வழங்கியுள்ள நிலையில் ஜஸ்டின் செல்வமிதிஷ் குடும்பத்திற்கு 5 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளது. இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த ஜஸ்டின் செல்வமிதிஷ் குடும்பத்திற்கு 20 லட்சம் மற்றும் அரசு பணி வழங்க பரிந்துரைத்துள்ளார். அதன்பின் ஸ்டெர்லைட் சம்பவ விசாரணை ஆணைய நிதிபதி அருணா ஜெகதீசன், இறுதி விசாரணை அறிக்கையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த நபர்களுக்கு 20 லட்சத்திலிருந்து 50 லட்சமாக இழப்பீடு தொகையினை உயர்த்தியும் மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அதற்கு உறுதுணையாக இருந்த சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீதும் மற்றும் உயர் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கையினையும் குற்ற வழக்கினையும் தொடுத்து சட்ட நடவடிக்கையினை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேற்கண்ட ஆணைய விசாரணை அறிக்கையின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் உறுதியளித்தார். இதனை மேற்கொள் காட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் அவர்களுக்கும் நேரடியாக மனு அளித்துள்ளோம் ஆனால் விசாரனை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட ஜஸ்டின் செல்வமிதிஷ் வீட்டிற்கு சென்று தற்போது வரை விசாரணை மேற்கொள்ள வில்லை. இழப்பீடும் அரசு வேலையும் தற்போது வரை கொடுக்கவில்லை. நீதி கிடைத்துவிட்டது ஆனால் நிதியும் அரசு வேலையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஜஸ்டின் செல்வமிதிஷ்க்கு ஏற்கனவே உடல்நல குறைவு இருந்துள்ளது என மருத்துவ குறிப்பில் உள்ளது. என்று காரணம் கூறுவது ஏற்புடையது அல்ல. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் வழங்கிய தீர்ப்பில் ஜஸ்டின் செல்வமிதிஷ்க்கு இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்கான அனைத்து ஆவணங்களும் இத்துடன் இணைத்துள்ளேன். ஆகவே மேற்கண்ட இறந்த நபரின் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீட்டு தொகையும் அரசு வேலையும் வழங்க வேண்டும். அருணா ஜெகதீசன், விசாரணை ஆணைய இறுதி அறிக்கையினை முழுமையாக நிறைவேற்றி நீதியை நிலைநாட்ட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணை விட்டு நிரந்தரமாக அகற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

