தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு புதிய தார்சாலை அமைக்க நிதி ஓதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்வேறு கால்வாய். வணிக வளாகம், வாகன காப்பகம், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தினமும் பார்வையிட்டு வருகிறார்.
பின்னர் கூறுகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைகாலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து அந்த பகுதிகளில் வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் திட்டங்கள் வகுப்பட்டு பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் எங்களுக்கு உத்தரவிட்டதின் அடிப்படையில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு கழிவு நீர் மழைநீர் கடலுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநகரில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்க்கும் வாட்சப் எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலம் வரும் புகார்கள் குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு உத்தரவு இடப்பட்டு தனது அழைபேசிக்கும் வரும் புகார்கள் குறைகள் குறித்து தனது உதவியாளர்களிடம் தகவல் கொடுக்கப்பட்டு நேரடியாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது மட்டுமின்றி பொதுமக்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று சுயநலமின்றி பொது நலத்தோடு பணியாற்றி வரும் சூழ்நிலையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் நல்ல முறையில் செய்திட வேண்டும் என்று ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வளர்ச்சிக்கு வேண்டிய பல கட்டமைப்புகளையும் ஓவ்வொரு பகுதிகளிலும் உருவாக்குவது குறித்து கவுன்சிலர்களிடமும் கருத்துகளை கேட்கப்பட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் மாசு இல்லாத தூய்மையான சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்குவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு தனது வார்டு பகுதி உள்பட பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்குவதற்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தோறும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் பூங்கா, மற்றும் பல்வேறு இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி தூய்மை பணிகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில் மூன்றாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை பகுதிகளிலும் தூய்மை சுகாதாரம் பணிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. மாநகரம் முழுவதும் மாசு இல்லாத தூய்மையான சுகாதாரமான நிலையை உருவாக்குவதற்கு அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் சீறிய முயற்சியுடன் மாநகாட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளன. மக்கள் சேவையே எங்களது சேவையாக இருக்கும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு அனுப்பியதை நிறைவேற்ற நிதி ஓதுக்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் நேரு, உறுதுணையாக இருந்த பாரளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதாஜீவன், ஆகியோருக்கு மாநகர மக்களின் சார்பில் நன்றியை மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதனால் பிரையன்ட் நகர் ராஜகோபால் நகர், டூவிபுரம், அண்ணாநகர், மட்டக்கடை முதல் தாளமுத்துநகர் வரை பி அண்டி காலணி, ரஹ்மத்நகர், செயின்ட் மேரிஸ் காலணி, மாதாநகர், ஹார்விபுரம், டேவிஸ்புரம், லெவிஞ்சிபுரம், எஸ்கேஎஸ்ஆர் காலணி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

