நாகப்பட்டினம் மாவட்டம்
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு
பலூன் பறக்க விடுதல், மனித சங்கிலி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஆகிய நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்துகொண்டார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 9
நாகப்பட்டினம் மாவட்டம் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பலூன் பறக்க விடுதல், மனித சங்கிலி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஆகிய நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டார்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் உரிமைப்பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அதனைத்தொடர்ந்து இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம் மகளிர் சுய உதவிகுழுவினர், சுகாதாரத்துறையினர், ஏராளமான மாணவ, மாணவியர் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மனித சங்கிலியினையும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வண்ண பலுன்களை காற்றில் பறக்கவிடும் நிகழ்ச்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
கடந்த இரண்டு வார காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்து நமது மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன. பெண்குழந்தைகளை போற்றி பாதுகாக்கவேணடும். பெண்குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் எண்ணம் கனவிலும் கூட வரக்கூடாது. இந்நிகழ்ச்சியில் புதுமணத்தம்பதிகள் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழவேண்டும். முக்கியமாக இன்றைய தினம் பெண் சிசு உருவாவதை தடுப்பது குற்றம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமான செய்தியாகும். மருத்துவம், வேளாண்மை மற்றும் அனைத்து படிப்புகளிலுமே பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். பல இரண்டு பெண் குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் செழிப்பாக உள்ளனர். வயிற்றில் உள்ள குழந்தை ஆண், பெண் பார்ப்பது குற்றமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை ஊக்குவிக்க அரசு பல எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கான கோலப்போட்டியும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு குறித்த வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் ஜோஷ்வின் அமுதா, மாவட்ட சமூகநல அலுவலர் தமிமுன்னிசா, துணை இயக்குநர் சுகாதாரபணிகள் செந்தில் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

