நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கும் விழாவில் கருத்தாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர்
உடன் உள்ளனர்.
நாகப்பட்டினம் டிசம்பர் 7 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கும் விழாவில் கருத்தாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் வானவில் மன்றம் துவங்கி வைக்கப்பட்டது. வானவில் மன்றத்தில் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கருத்துக்களை எளிய பரிசோதனைகள் மூலம் கொண்டு செல்வதற்கான முறையாகும். நம் மாவட்டத்தில் கருத்தாளர்கள் கல்வித்துறையினரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்க தொண்டர்கள் நம் மாவட்ட வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்காக கருத்தாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே, கருத்தாளர்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு வழங்கும் கற்பித்தல் உபகரணங்களை நம் மாவட்ட கல்வித்துறையினரால் நியமனம் செய்யப்பட்டுள்ள கருத்தாளர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க தொண்டர்கள் அரசு பள்ளிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கருத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் கருத்தாளர்கள் கற்பித்தல் உபகரணங்களை பெற்று நம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.
இவ்விழாவில் நகர மன்றத் துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஆரிப் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

